கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 25

அன்று அலோஹா பண்டிகை. அலோஹா பண்டிகை அங்கு வருடந்தோரும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். நம்ப ஊர் திருவிழா போல் இது Hawaii- யன் திருவிழா. உலக மக்களுக்கு அவர்களின் கலை கலாச்சாரத்தை தெரியப்படுத்துவதே இவ்விழாவின் தலையாய நோக்கமாகும்.

கடற்கரை ஓரங்களில் அமைந்திருக்கும் பல சுற்றுலா மையங்கள் ஒன்றிணைந்து இந்நாளில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வர். இதில் பல உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்று பயணிகள் முதற்கொண்டு கலந்து ஆட்டம் ஆடி பாட்டு பாடி குதூகலிப்பர்.

சுஜியும் எமியும் பள்ளி நாட்களிலிருந்தே ஒன்றாய் படித்து பின்பு கல்லூரியிலும் ஒன்றாகவே பயின்ற ஆருயிர் தோழிகள். வேறு வேறு course என்றாலும் தங்கிய அறை என்னவோ ஒன்றுதான்.

மஹில் சஹிஷ்ணு, நிமலன், விமல், கயல் கூட சுஜியுடன் ஒன்றாய் கல்லூரியில் படித்தவர்கள் தான். ஒரு முறை கல்லூரி சார்பாக assignment - காக கல்லூரியை பிரதிநிதித்து இவர்கள் அனைவரும் Hawaii- யன் தீவிற்கு பயணம் சென்றனர்.

கடல் பக்கமாய் இருந்த அந்த ஹோட்டல் விடுதியில் அனைவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கு அங்கிருந்த கடல் மணற்பரப்பில் மேடை போடப்பட்டது. மேஜை நாற்காலிகள் அடுக்கப்பட்டன. மதுவுக்கும் மாதுவுக்கும் கூட பஞ்சமில்லை எனலாம். அங்கே ஆரவாரமான ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரம்பமானது.

எமிக்கு முன்பிருந்தே ஆடல் பாடலில் அதீத ஈடுபாடு இருந்ததால், அவள் அங்கிருந்த Hawaii- யன் மக்களோடு சேர்ந்து அவர்களின் விழாவை கொண்டாடி களிக்க ஆரம்பித்திருந்தாள். தமிழ் மற்றுமின்றி ஆங்கில பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்த எமியின் கைகளில் மைக் கிடைத்தது.

அதை பற்றியவள் பாட ஆரம்பித்தாள். Rihanna மற்றும் Shakira பாடிய Can't remember to forget you பாடலை அவள் பாட அங்கிருந்தோர் கை தட்டி அவளை இன்னும் உற்சாகப்படுத்தினர்.

சுஜி அங்கிருந்த மேஜை ஒன்றில் அமர்ந்து குளிர்பானம் அறிந்தியவாறே எமியின் ஆடலையும் பாடலையும் ரசித்துக் கொண்டிருந்தாள். எத்ர்ச்சையாக அவளைத் தாண்டி சென்ற 'அவனை' மீண்டும் திரும்பி பார்த்தாள்.

சுஜியின் மனதில் : அட, நம்ப நிமலா இது, என்ன எப்போதும் இருக்கற மாதிரி இல்லாம இன்னிக்கி வித்தியாசமா இருக்கான். ஒரு மாதிரி smart - டா. சைட் அடிக்கற அளவுக்கு ஒன்னும் அவ்ளோ பெரிய அழகுலாம் இல்லனு நினைச்சேன் ஆனா, இப்போ..

நிமலன், சுஜியின் கண்களுக்கு அன்று மிக வசீகரமாகவே தெரிந்தான். இனி பார்ப்பது எல்லாம் அப்படித்தான் தெரியும் காரணம், அவள் அருந்திய Margarita. எல்லாம் இந்த tequila பண்ணுகின்ற வேலை.

போதை மண்டைக்கு ஏறியதும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எமி பாடிக்கொண்டிருந்த மேடையை நோக்கி ஓடி அவளிடமிருந்து மைக்கை பறித்து இவள் பாட ஆரம்பித்தாள். சுஜியின் மொத்த பார்வையும் 'அந்த' நிமலன் மீதே இருந்தது. என்னவோ இவள்தான் அந்த பாடலில் இருக்கும் rihanna - வை போல வளைந்து நெளிந்து ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லை.

'அந்த' நிமலனும் மேடையில் இவனை பார்த்து பாடிய சுஜியை பார்த்துக் கொண்டேதான் இருந்தான். சுஜி வண்ண வண்ண பூக்கள் நிறைந்திருந்த dress ஒன்றினை அணிந்திருந்தாள். தோள்பட்டைக்கும் கீழே கொஞ்சம் நீண்டு வளர்ந்திருந்த அவளின் கூந்தலை அன்றைய Hawaii- யன் விழாவிற்காக சுருளாக்கி வைத்திருந்தாள்.

பெரிய பெரிய சுருள்கள் சுஜியை மற்றவர்களின் கண்களுக்கு கவர்ச்சியாக காண்பித்தது. அதுமட்டுமின்றி, அவளின் கூந்தலை சுஜி லேசான பழுப்பு வர்ணம் (brown) கொண்டு தீட்டிருந்தாள். அன்றைய பொழுது அங்கே வந்திருந்த ஆண்களின் கண்கள் ஒரு முறையேனும் இவளை திரும்பி பார்க்கவே செய்தது.

அவளை அங்கம் அங்கமாக தூரத்திலிருந்து 'அந்த' நிமலன் ரசித்துக் கொண்டே இருந்தான். இன்னும் அவன் நிறுத்தவில்லை. சுஜியின் கையிலிருந்த அந்த அழகான செந்நிற தங்க bracelet அவளின் ஒற்றை காலில் இருந்த மணிமணியான சில்வர் கால் சங்கிலி. அவளின் ரத்த சிவப்பான உதட்டு சாயம் என அத்தனையையும் இன்ச் இன்ச்சாக ரசித்தான்.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (31-Oct-19, 3:14 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 198

மேலே