ஆறாம் பூதமாய் வள்ளுவம்

கடலில் கல்லெறிந்து
கடுந்துன்பம் கொடுத்ததைப்போல்
காற்றை அடைத்து வைத்து
கடுங்காவல் தந்ததைப் போல்
கதிரவன் மேல் நீருற்றி
கடும் வெம்மை அழித்ததைப் போல்
காக்கின்ற பூமியதனை
கண்டதுண்டமாய் வெட்டியதைப் போல்
கருப்பு பூசி வள்ளுவனை
களங்கம் செய்த செம்மை அறிவிலிகளே
நீருள்ளவரை நிலம் நெருப்பு காற்றிருக்கும்
ஆறாம் பூதமாய் வள்ளுவமும் இருக்கும்
அறிவைப் பெருக்கி அனுதினமும்
ஆற்றலான வள்ளுவனைத்
தொழுங்கள் அறிவிலிகளே
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Nov-19, 9:56 am)
பார்வை : 93

மேலே