நிறையா குறையா

பண்டைய மனிதர்கள்
பழி, பாவத்திற்குப் பயந்தார்கள்,
தாய்ப்பால் குடித்த வரை
தரம் தாழ்ந்து போனதில்லை,
வாழ்ந்து மகிழ்ந்தார்கள்—பிறரை
வாழ வைத்தார்கள்

பக்கத்து வீட்டாரும்
பாசத்தோடு பழகினார்கள்,
நெஞ்சம் நிறைந்ததால்
நம்பிக்கை நிலைத்தது,
காவிரி அன்னை கூட—அன்று
காத்து நின்றாள் மக்களை

அபூர்வங்கள் நிறைந்த
அற்புத மனிதர்கள்,
காவிரி நீர் பருகிய
காலத்தின் விழுதுகள்,
காலனே வந்தாலும்
காத்திருக்க சம்மதிப்பான்

அன்று பணம் கொடுத்து
அதிகாரம் பெற்ற நிகழ்வுகள்
இங்கு வாழ்ந்த மக்களிடம்
இருந்ததாக
அகழ்வராய்ச்சியில் இல்லாதது
நிறையா? குறையா?

எழுதியவர் : (6-Nov-19, 11:20 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 60

மேலே