பெயரில்லா உறவு

நான் அன்னைக்கு அவள பார்த்தேன். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு திரும்ப பார்த்தேன். ஆனாலும் எங்க பார்த்தேன்னு நியாபகம் வரல. அந்த அரை மணி நேர நடைபயணத்துல எவ்வளவு யோசிச்சும் நியாபகம் வரல இந்த மரமண்டைக்கு. நடைபயணம்னு சொன்னதும் பெருசா எதுவும் யோசிச்சிடாதிங்க. நான் எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாண்டியன் பஸ் பாதி வழியில பஞ்சர் ஆனதால தான், இந்த கதை இந்த இடத்துல ஆரம்பிக்குது...

எப்பவும் போல ஸ்கூல் முடிஞ்சு கம்ப்யூட்டர் சென்டர்க்கு படிக்க போனா, கூட படிக்கிற பொன்னு ஒன்னு வந்து என்னை நல்லா பாராட்டுச்சு. எதுக்குனு யோசிக்கிறிங்களா? வேற ஒன்னும் இல்லிங்க. நான் காலைல பார்த்தது இந்த பொண்ணோட அத்தைப் பொண்ணாம். அதுக்கு எதுக்கு பாராட்டனும்னு யோசிக்காதிங்க.

காலைல இந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு நான் நினைச்சத அந்த பொண்ணுக்கே கேட்குற மாதிரி ரொம்ப சத்தமா சொல்லிருக்கேன். அந்த பொண்ணு போயி இந்த பொண்ணுக்கிட்ட சொல்ல, இந்த பொண்ணு வந்து என்னடா என்னோட அத்தைப் பொண்ணை கிண்டல் பண்ணுனியாமே'னு கேட்க, அட அது உன்னோட அத்தைப் பொண்ணா, இதுவரை கிண்டல் பண்ணனும்னு தோணலை. இனிமேல் கிண்டல் பன்னுவேன்னு நக்கலா சொல்லி கிட்டத்தட்ட 14வருசம் ஆயிருச்சு...

இன்னும் இதெல்லாம் நியாபகம் வச்சிருக்க. அதனால அந்தப் பொண்ணு உன்னோட காதலியா னு நீங்க கேக்கலாம். ஆனால் அது எல்லாம் இல்லிங்க. தோழியானு கேட்கலாம். ஆனால் அது கூட இல்லிங்க. அட அப்பறம் அந்தப்பொண்ணு யாருப்பானு கேட்டா என்கிட்ட பதில் இல்லிங்க...

அவ்வளவு ஏன், நான் அந்தப் பொண்ணுக்கிட்ட இதுவரை மொத்தமாவே நாலு வார்த்தை தான் நேரா பேசிருக்கேன்னா பார்த்துக்கோங்க...

ஒரு வருசம் முழுக்க ஒரே பஸ்ல பக்கத்துலயே பயணிச்சுருந்நாலும், நேரா பேசுனது இல்லை. தினமும் என்னோட புத்தகங்கள அவ கிட்ட கொடுப்பேன். வாங்கி வச்சுருப்பா. என்னோட நண்பர்கள் கிட்ட பேசுற மாதிரி அவள கிண்டல் பண்ணுவேன். அவளை கா'கா னு சொல்லி தான் கிண்டல் பண்ணுவேன். ஏன்னா அவ கருப்பு அப்டிங்கிறதால இல்லை. அவ பேரு கார்த்திகா - கா ல ஆரம்பிச்சு கா ல முடியுரதால.

பதினாலு வருசத்துல நான் நிறைய மாறிட்டேன். அவளும் நிறைய மாறி இருப்பா னு நினைக்கிறேன். கடைசியா பார்த்து எட்டு வருசத்துக்கு மேல இருக்கும். ஆனாலும் நிறைய அழகான தருணங்களை தந்த அவளுக்கு ஒரு நன்றி சொல்லனும்'னு தோணுது. முடியுமா னு தெரியல, பார்க்கலாம்.....

எழுதியவர் : மதன் (17-Nov-19, 4:52 am)
சேர்த்தது : Madhankumar R
Tanglish : peyarillaa uravu
பார்வை : 339

மேலே