கூத்துப்பையா

(கூத்துக் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கண்ணப்பர் இல்லத்தில் நடக்கும் நிகழ்வு)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@■■■■■■■■■■■■■■■■■■■■◆
கூத்துப்பைய, வந்திட்டயா. வா, வா. நேத்து ஒரு தொலைக்காட்சில நீ இணைஞ்சிருக்கும் கூத்துழுவின் 'வேளாண்மை செழிக்க' என்ற பாடல் கூத்தின் ஒரு பகுதியை ஒளிபரப்பினாங்க. அதைப் பாத்து நானே மெய்சிலிர்த்துப் போயிட்டேன். உம் பேரு என்ன தம்பி.
@@@@@@
அய்யா எம் பேரு கூத்தரசன். அகில இந்திய வானொலியில் கூத்தபிரான்னு ஒரு பிரபலமானவர் பணியாற்றியதைப் பற்றிக் கேள்விப்பட்டிருங்க.
@@@@@@
அவரை நல்லாத் தெரியும். நிகழ்ச்சி நடத்த பலமுறை வானொலி நிவையத்துக்குப் போயிருக்கிறேன். உம்... சொல்லு..
@@###@@@@@
எங்க கொள்ளுதாத்தாவோட அப்பா நாடகத் தந்தை பம்மல் சம்மந்த முதலியாரிம் கூத்துக் கலைக்கு பயிற்சி எடுத்தவர். எங்க கொள்ளுத்தா எங்க தாத்தாவிடம்ஷஒரு சத்தியம் வாங்கிட்டாரு.
@@@@@
"நீயும் நம்ம வாரிசுளும் நாட்டுப்பறக் கலையான கூத்துக்கலையை வளர்க்க பாடுபடவேண்டும். நம்ம குடும்பமே கூத்துக்கலைஞர்கள் குடும்பமாத்தான் இருக்கணும்"ன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டாருங்களாம்.

எங்க அப்பாவும் கூத்துக்கலையை வளர்க்க அரும்பாடுபட்டவர். நானும் வெவரம் தெரிஞ்ச நாளிலிருந்து அப்பா நடத்தும் கூத்தில் படிச்சிட்டே நடிச்சிட்டு இருந்தேன்.. எனக்க்கு பத்து வயசு ஆகும்போது அப்பா தவறிட்டாருங்க அய்யா..நான் இப்ப பத்தாம் வகுப்புப் படிக்கிறேன். இந்த அருமையான நாட்டுப்புறக் கலையை உவகம் முழுவதும் பரப்புவதே என்னோட நோக்கம்.
@@@@@@
தம்பி கூத்தரசா,
@@@@@@
சொல்லுங்க அய்யா.
@@@@@@
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். என் பையன்கள் ரண்டு பேரும் கூத்தில் ஆரவமில்லாம பொறியியல் படிச்சு அமெரிக்காவிலே வேலை பாக்காறங்க. என்னையும் அங்கேயே வரச்சொல்லி அவுங்க வற்புறுத்திக் கூப்பிட்டும் நான் அங்கு போகவிரும்பல. நானும் உங்க கொள்ளுத்தாத்தா மாதிரி கொள்கை உடையவன். கூத்துக்கலையை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பணியைச் செஞ்சிட்டு இருக்கிறேன். எம் பையன்கள் எனக்கும் மனைவிக்கும் தேவையான பணத்தை அனுப்பி வைக்கிறாங்க.

நம்ம கூட்டமைப்பின் சார்பில் உனக்கும் மற்ற கூத்துக் கலைஞர்களுக்கும் ஆண்டு இறுதியில் பாராட்டு விழா நடத்தப் போறாம் அந்த விழாவிலே உனக்கு கலைமாமணி விருது வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்போறாம்.
பதினஞ்சு வயசில கலைமாமணி விருது பெறும் முதல் கூத்துக் கலைஞர் நீ தான்.
வாழ்த்துக்கள். இந்த ஆயிரம் ரூபாயை மறுப்புச் சொல்லாமல் எனது அன்பளிப்பா வச்சுக்கா தம்பி கூத்தரசா.
@@@@@@@
மிக்க நன்றிங்க அய்யா.(அவரின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுகிறான் கூத்தரசன்)
@@@@@@
வாழ்துக்கள் தம்பி. கூத்தரசா. இனிமே நீ புரட்சிக்கூத்தன்.

எழுதியவர் : மலர் (19-Nov-19, 1:34 am)
பார்வை : 84

மேலே