மூழ்கிக்கொண்டு இருக்கிறோம்

மூழ்கிக்கொண்டு இருக்கிறோம்.
=================================================ருத்ரா

"கோண தென்ன மரத்திலே
குருவி கூட்டிலே.."

அன்றைய தேவதாஸ் காதல்
கட்டிய காதல் கூடு இது
உள்ளச்சிலிர்ப்புகளின்
அந்த மத்தாப்பு ஒளிப்பிஞ்சுகள்
காதலின் விளிம்பை தொடுமுன்
விடியலும் தொலைந்தது
வானமும் தொலைந்தது
ஆனாலும் காதலின் அந்தக்குரல்
எத்தனை நூறு யுகங்களை
இன்னும் ஊஞ்சல் கட்டி ஆட்டுகிறது?

"பாழும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்"
கேட்கும்
இதயங்களுக்குள் எல்லாம்
"துணிந்த பின் மனமே.." எனும்
சுநாமி தான்.
ஆம்
துன்பமான இன்பத்தில்
மூழ்கிக்கொண்டு இருக்கிறோம்.

===================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (18-Nov-19, 8:35 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 84

மேலே