காதலியைத்தேடி நான்

சங்கத்தமிழ் காதல் முதல்
இன்றையத்தமிழ்க் காதல்
இன்னும் கவியத்தமிழ்க் காதல்
என்று காதல் கவிதைகள் எல்லாம்
படித்த மனம் எனக்கென்று ஓர்
காதலியைத்தேட சொல்லியது
மனம் போன போக்கிலே கால் போனது
காதலியைத்தேடி தேடி கண் பூத்தது
தூக்கம் கண்களைத்தழுவ கால் போனது
வீடு தேடி.....
துவண்டுபோய் கட்டிலில் ஓர் மூலையில்
நான்.......
சுவரில் ஓர் சிலந்தி தனக்கென ஓர் வீடு
அமைக்க பெரும் முயற்சியில் ......
கட்டிய வீடு கலைய கலைய
மனம் தளரவில்லை சிலந்தி....
அந்த கட்டத்தில் தூங்கிவிட்டேன் நான்
விழித்து பார்க்கிறேன் சுவரை நான்
சிலந்தி இப்போது அழகிய கூட்டுக்குள்
சொகுசாய் இருக்க...
சிலந்தி சொல்லித்தந்தது 'தளரவிடாதே
மனதை, முயன்றால் வெற்றி என்று...

இதோ நான் காதலியைத்தேடி அலைகிறேன்
மீண்டும் ''''
சிலந்தியாவது எப்போது. .......
மனம் என்னைக் கேட்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Nov-19, 4:18 pm)
பார்வை : 147

மேலே