அவள் வருகைக்கு காத்திருக்கும் நான்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் நான்
மயக்கம் போனது இரவு மெல்ல வந்தது
முற்றத்திலே வெள்ளி நிலா
இரவை பகலாக்கியது குளிர்ந்திடும் பகலாய்
என் மனதிலோ அலைப்பாய்ந்து கொண்டிருந்தது
நிலவின் குளிரும் என் மனதிற்கு இதம் தரவில்லை
அது எதிர் வீட்டு ஜன்னலில் நிலவைத் தேடியது
ஆம் நிலவெனும் என்னவளை .....
வான் நிலா வந்தபின்னும் இன்னிலா
இன்னும் வராதிருக்க வாடியதே என் மனம்
வாராயோ வெண்ணிலாவே மூடிய
ஜன்னல் திறந்து காட்சி தருவாயா
காத்திருக்கிறேன் இங்கு நான் உனக்காக