மீறின கடனும் மாறின காலமும் - சி எம் ஜேசு
வாழ்வின் வளர்வு
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகுது
மண்ணில் பிறக்கின்றோம்
அன்னை மடி தவழ்கின்றோம்
பெற்றோர் உற்றார் உறவுகள்
சூழலில் வளர்கின்றோம்
வீடும் அதன்
சுற்றமும் மட்டுமே உள்ள வாழ்வில்
அறிவும் வெளி சூழலும் பழக
பள்ளிக்கூட அறைகளில் வாழ கற்றுக்கொள்கிறோம்
வெளியிட பயணமும் நாட்டின் நன்மை திண்மை
சூழலும் அனுபவ அறிவாகி பெரிதாகிறோம்
இவ்வாறான சூழலில் இருக்கும் ஒரு மனிதம்
இரு மனமாக ஒருமணமாகி திருமணமாகி குடும்பமாகுது
திருமணத்தால் எழுச்சியும் வெளிச்சமும் வாழ்வாகி
வையத்துள் யாவும் நிறைந்த அனுபவ அறிவை பெறுகிறான் மனிதன்
நடுவிலே ஆசைகளால் வாய்ப்புகளால் வசதிகளால்
அசதிகளில்லாமல் மகிழ்வை தரும் வாழ்வு சற்றே திசை மாறும் போது
வரும் எனும் மானம் வராமல் போகும் போது
வாழ்விலே வரும் அவமானங்கள் ஏமாற்றங்கள் பெருகி
பிறரின் கடன் உதவிகளை தேடி நாடி அதை கட்ட முடியாமல்
பிரச்சனைகளுக்குள் சிக்குண்டவனாகிறான்
எங்கிருந்து உதவிகள் வரும் அது யார் யார் மூலம் வரும்
சுமைகளிலிருந்து விடுபடும் நாள் எந்நாளோ என
ஏக்கமுற்று வீக்கமுற்று ஏங்குகிறான் மனிதன்
அல்லலாகி அசைபோடும் வாழ்விலே மனிதன்
துள்ளலாகி துவலாதிருந்து கடனை அடைக்கும் வழிகளை
தேடுவானாகில் அவனுக்கு வெற்றி நிச்சயம் - அல்லாமல்
துவண்டு துயருற்று கவலைகொல்வானாகில்
சிலந்தி சிறைக்குள்ளாகுவனை போலாகி சோர்வை அடைவான்
மீறின கடன்களிலில் இருந்து மீள
மாறிய வழிகளை பின்பற்றி வெற்றி படிக்கட்டுகளில் ஏற
நினைக்கும் எல்லா மாந்தர்க்கும் இதை அற்பணிக்கிறேன்
சுற்றிலும் கடனெனும் அம்புகளால் குறி வைக்கப்பட்டு
நடுவில் எது முதலில் வந்து பாய போகிறதோ அதை எதிர்கொள்ளும்
அன்பிய மனப்பான்மையோடு உங்கள் நான்