அவள்

அவள் அணைப்பின் இறுக்கம்
அது தந்த உஷ்ணம்....
அவள் தந்த முத்தங்கள்
அதில் வந்த குளிர்ச்சி -என்னை
திக்கு முக்காடிவைத்தது
சூரியனும் சந்திரனுமாய்
'ப்லோ ஹாட், ப்லோ கோல்டு'
என்று ..... இது காமத்தின் ரூபம்
ஆசுவாசப்படுத்திக்கொண்டு நான்..
இப்போது மீண்டும் அவள் அணைப்பில் நான்
அன்பின் பிணைப்பில் காதல்
எனும் தென்றல் வீசியது
எம்மைச் சுற்றி ...... அழியா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Dec-19, 9:05 pm)
Tanglish : aval
பார்வை : 207

மேலே