நறுந்தொகை 31
சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. 31
- அதிவீரராம பாண்டியர்
பொருளுரை:
சிற்றறிவுடையோர் செய்த சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும் மேலோராகிய நற்குணமுடையோர் பொறுத்துக் கொள்வது அவர்கள் முறைமையாகும். பொறுமையினாலேயே அவர்கள் பெருமை அறியப்படும்.