ஓய்வின் நகைச்சுவை - முதற் பாகம்

ஓய்வின் நகைச்சுவை - முதற் பாகம் -
1- 130 நகைச்சுவைகள்
இ புத்தக வடிவில் - KDP- AMAZON இணைய தளத்தில்

என்னுடைய "ஓய்வின் நகைச்சுவை" எனும் தொடருக்கு அக்டோபர் 2017 முதல் தினமும் உங்கள் கருத்துக்களை, பாராட்டுக்களை, குறைகளை சுட்டிக்காட்டி என்னை என்னுடைய ஓய்வு காலத்தில் மனநிறைவுடன் 65 வயது குழந்தையாக தவழ்ந்திட, புரண்டிட, எழுந்திட நடந்திட, ஓடிட, கரம் பற்றி உதவிய தினமும் உதவும், அன்பு சகோதர சகோதிரிகளே, நல் உள்ளங்களே இன்று 359 நகைச்சுவைகளை கடந்தநிலையில் முதல் 130 நகைச்சுவைகளை தமிழில் KDP- AMAZON இணைய தளத்தில் 7வது இபுத்தகமாக வெளியிட்டுள்ளேன். அதனை இறைவன் பாதங்களில் படைக்கின்றேன். உங்கள் ஆசீர்வாதங்களை அர்ச்சனை பூக்களாய் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்

என்னுடைய அன்புப் பரிசாக இன்றுமுதல் 5 நாட்களுக்கு அதனை எந்த பொருள் செலவும் இல்லாமல் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எனக்கு அனுப்புங்கள். பயணம் தொடர்ந்திட இறைவன் அருள்புரிவாராக!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (8-Dec-19, 8:29 am)
பார்வை : 164

மேலே