வறட்டுத் தவளை

என்னை பலவந்தப்படுத்தியவன்
தூரப்போய்விட்டான்

அருவருப்பு தாங்கவில்லைதான்

திணிப்பது என்பது நான் பெற்ற
சாபம் என்று

சமாதானம் அகிப்போகும் மனது

நம் கழிவை கைகளால் கழுவிக் கொள்வதில்லையா

என்னை குறித்த வறட்டுத்தவளைகளின் சத்தம் மட்டும்

காலில் மிதிபட்ட மலமாய் உடல்முழுக்க கூசச்செய்கிறது

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-19, 10:06 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 42

மேலே