பதரும் நெல்லானால்

கனமழையில்
நனைந்தப் பின்னும்
கரையவில்லை
கனத்த இதயம் !
சிந்திடும் விழிநீர்
கலந்து வழிந்தது
கொட்டும் மழைநீர்
கரித்தது அதனால் !
கசக்குது இனிப்பும்
நினைவில் வந்தால்
முற்றிலும் முறிந்த
நட்புகள் உறவுகளை !
உதறிய நெஞ்சமும்
கதறும் காலடியில்
பதரும் நெல்லானால்
பலரும் நெருங்கிடுவர் !

பழனி குமார்
08.12.2019

எழுதியவர் : பழனி குமார் (8-Dec-19, 10:52 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 250

மேலே