ஒரு மாலை நேரம்

ஒரு மாலை நேரம்
வே.ம.அருச்சுணன்

சம்பளம் கிடைத்திட்ட மாலைவேளை
சாந்திக்காக நண்பர்கள் கூடுகின்றார்
தெம்புடனே கடைதனில் அமருகின்றார்
தேனாய்க் கொஞ்சிடும் பேரழகிகள்
வம்பில்லா தேன்சுவை பேச்சாலே
வாஞ்சையுடன் வருகின்றார் புட்டியோடு
தம்கட்டியே குடிக்கின்றார் வயிறுபருத்திட
தாளங்கள் தாறுமாறாய்ப் போடுகின்றார்.....!

பொதுமிடமென் றும்பாராமல் பேயாட்டம்
போடுகிறார் இனமானம் விற்கின்றார்
மதுவினால் தம்முயிருக்கும் விலைகூறுகிறார்
மாமனிதரையும் வம்புக்கே இழுக்கின்றார்
எதுசொலியும் அனைவரையும் அநீதிசெய்கிறார்
ஏனென்று கேட்போரை வசைபாடுகிறார்
இதுவெலாம் போதையில் செயல்படுத்தும்
ஈனப்பிறவிகள் பூமிக்கிழைக்கும் துரோகமன்றோ.....




குடித்தழியும் பாவச்செயலை விட்டொழிக்கும்
கூடிவாழும் குடும்பத்தலைவனை வணங்குவோம்
நெடியவாழ்வில் கோவில்கலசமாய் விளங்கிடும்
நேர்மையுள்ள மனிதர்களை வாழ்த்துவோம்
இடியாய்த் துன்பங்கள் சூழ்ந்தாலும்
ஈடற்றவாழ்வை குறைவின்றி நடத்திடுவோர்
முடிமன்னர் பேற்றினைப் பெற்றவரே
மூடர்களின் செயல்தனைத் வேரறுப்பவரே.....!

நல்லநட்பால் உயர்ந்தோர் நிலைக்கின்றார்
நாளுமே குணக்குன்றாய் வாழ்கின்றார்
பொல்லாதவர் சகவாசத்தில் அழிகின்றார்
போக்கிரிகள் உறவென்றால் கெடுகின்றார்
சொல்வேந்தர் சொற்கேட்டால் உயர்கின்றார்
சோதனைகள் கடந்துமே வெல்கின்றார்
சொல்வாக்கிலார் ஆராதனையை வெறுக்கின்றார்
சோதனையின்றி வாழ்கையினை நகர்த்துகின்றார்.....!

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (9-Dec-19, 3:32 pm)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 2195

மேலே