முதல் இரவு ♥️
முதல் இரவு♥️
நித்திரைக்கு விடை கொடுத்து கனவுகளை
நினைவாக்கும் முக்கிய இரவு.
எண்ணங்களை பல வண்ணமாக்கும் இரவு.
இளமையின் புதுமைகள் அரங்கேறும் இரவு.
காதல் கனிந்து காமம் ஆக மாறும் இரவு.
இன்பத்தின் எல்லை கோட்டை தொட துடிக்கும் இரவு.
வாலிப மனதிற்கு விருந்து அளிக்கும் இரவு.
தென்றல் மலரை தீண்டிய இரவு.
சிந்தாமல் சிதறாமல் வண்டு தேன் சுவைக்கும் இரவு.
உயிர்கள் பிறந்த பயனை அடையும் இரவு.
இன்னொரு உயிர் உற்பத்தி ஆகும் இரவு.
- பாலு.