இயற்கையின் சமத்துவம்
மன்னவனோ.... சின்னவனோ
நல்லவனோ....புல்லனோ
கண்ணியவானோ.... காமுகனோ
கர்ணனோ...... கஞ்சனோ
மாளிகை வாசியோ.... மரத்தடி பரதேசியோ
பேதையோ...... பேரறிவாளனோ
பாரபட்சமற்று நாசி புகுந்து
சுவாசம் ஆகிறது காற்று...
இயற்கையின் இயக்கமானது
இயல்பாய் சமத்துவமானது....!