அவள் அழகு

இப்படித்தான் என்னவள் இருப்பாள்
என்ற கற்பனையில் நான் அவள் அழகை
அங்கம் அங்கமாய் சித்தரித்தேன் என்
கவிதை வரிகளில்......
எதிரே வந்து நின்றாள் ஓர் பெண் மான்
நான் கற்பனையில் கண்டு மகிழ்ந்த
பெண்ணின் அழகை தோற்கடிப்பவளாய்
நான் எழுதிய அவள் அழகின் கவிதை
இந்த அழகைக் கண்டு நாணியதோ.......
பேசாது என் தோள்பையில் அடைக்கலம் போனது
கவிதையையும் மிஞ்சியதோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Dec-19, 2:44 pm)
Tanglish : aval alagu
பார்வை : 550

மேலே