தத்துவச் சிதறல்கள் - வெண்பாவில் வடித்த அந்தாதிக் கவிதைகள் - பகுதி 2
நமக்கு நல்வழிசொல் ஞானத்தைக் கேட்டால்
இமைக்கும் பொழுதிலிருள் போகும் - சுமக்கும்
சோகங்கள் நீங்கச் சுடர்விடுமே பொய்ம்மைசேர்
மேகத்தின் மீளும் மதி.
மதிநலம் வாய்க்க மனச்சலனம் நீங்க
விதியினை நாளும்நாம் வெல்வோம் - இதமுறவே
இன்னாத நீக்கி இடர்களையும் நாம்போற்றும்
முன்னோர்கள் சாற்றும் மொழி.