நாமும் நமக்கும்

இயற்கைக்கு முரணாக எதனையும் விதைப்பின்
அதனால் ஆபத்தே விளையும்.
பெண்டீருக்கு தெரிவது ஆணுக்கு மறைவாக
இயற்கை படைப்பே விசித்திரம்.
நாக்கின்றி மனிதன் குரலது இல்லை
நாக்கே உலகின் நஞ்சாம்.
பசித்து புசித்தால் வசிப்பது நெடுமை
பசியில்லா உணவு கெடுமை.
பதுக்கலில் பூமி ஈடுபாடு கொண்டால்
வசிப்பது யாருக்கும் சிறையே
- - - - - நன்னாடன்