உயிர் குடித்தவன்

நினைவுகளோடு
போராடி தோற்றுபோய்
நிற்கிறேன்
நிஜம் காண வேண்டுமென்று...

ஒவ்வொரு நொடியும்
என் கண்கள்
உன்னை காண்பதாய்
உணர்கிறேன்.........!!!

தாயின் அன்போடு
என் கரங்களால்
உன் கூந்தல்
வருடதுடிக்கிறேன் .....

ஆறு மாத பிள்ளைபோல்
உன்னை அள்ளி அணைக்க
ஏங்கி தவிக்கிறேன் ....

என் கண்கள்
துளி நீரை மட்டும்
சிந்திவிட்டு உயிர் காதலை தேக்கி வைத்து கொண்டு காத்திருக்கிறது என் உயிர் குடித்தவனே உன்னை காண.......!!!

எழுதியவர் : வெண்ணிலா பாரதி (30-Dec-19, 2:14 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
பார்வை : 130

மேலே