உன் முகத்தின் கன்னத்தழும்பு

தொடுவான நீலமாய் நான்
அதிகாலை வானமாய் நீ
மார்கழி குளிராய் நான்
மனங்கவரும் கதிராய் நீ
செவ்வரளிப் பூத்ததாய் நீ
சில்லென்ற சிரிப்பால் கவர்ந்தாய்
கள்ளுண்ட வண்டாய் நான்
கடும் மயக்கத்தில் சுழலலானேன்
உன் முகத்தின் கன்னத்தழும்பு
என் மோகத்தை செழுமையாக்க
பெரும் நெருப்பை உண்பதைப் போல்
கடும் அனலில் திரியலானேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-19, 10:04 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 86

மேலே