செந்தமிழ் பாடும் சிநேகிதியே

நாவில் தமிழூறும் போதெல்லாம் உன்னையே
நான்நினைத்துப் பாடுகிறேன்
பூவில் தேன்சிந்தும் போதெல்லாம் உனது
புன்னகை சிந்தும் அழகை நான் நினைக்கிறேன்
வான்தவழும் நிலவு வானவில்லில் எல்லாம்
நீ நடக்கும் வீதியாய் நான் ரசிக்கிறேன்
தேன்சுமந்த செவ்விதழில் செந்தமிழ் பாடும் சிநேகிதியே
இனி நீநடக்க வேண்டிய வீதி என் நெஞ்ச வீதியே !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-19, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே