புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு இளைஞனே!

உனக்குள்
ஒளிந்து கிடக்கும்
திறமைப் பெட்டகத்தை
வெளிக் கொணர்.

உனக்குள்
முடங்கிக் கிடக்கும்
அறிவொளிச் சிறகை
ஆனந்தமாய் விரி; பற.

உனது அக விளக்கு
உலக அகல் விளக்கு.
அதைக் கொண்டு
இருளை விலக்கு.

வெற்றிப் பூ
விரைவாய்
விரிவாய்ப் பூக்கட்டும்.

உன் விரலசைவில்
விடியல் விடியட்டும்.

வாழ்க பல்லாண்டு
வளர்க புகழ் நீண்டு
வாழ்த்துகள் புத்தாண்டு.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (1-Jan-20, 8:43 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 231

மேலே