தைப் பொங்கல் வரலாற்றுத் தகவல்கள்
தைப் பொங்கல் வரலாற்றுத் தகவல்கள்.
தைப் பொங்கல் விரைவில் வரவுள்ளது!
இச்சமயத்தில் பலர் தமது நெருங்கிய உறவில் மரணம் நிகழ்ந்த காரணத்திற்காக்த் தம் வீட்டிலும் தோட்டத்திலும் பொங்கல் வைக்காமல், "சாவு நடந்ததால் தீட்டு உள்ளது" என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
இது சரியல்ல.
ஏனென்றால், பொங்கள் எந்த விதத்திலும் ஒரு மதச் சடங்கல்ல!
அது வெறும் பழமை தொடர்பான ஒரு சம்பிரதாயம் அல்ல!
அது நமது நன்றிக் கடன் ஆகும்!
என்ன வகையான நன்றிக் கடன் தெரியுமா?
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை;
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்று வள்ளுவர் சொன்னதற்கேற்ப நாம் தவறாது செலுத்த வேண்டிய செய்நன்றிக் கடன்!
அதாவது நமக்கான உணவு உற்பத்தியாக வேண்டும் என்பதற்காக நமக்காக அல்லும் பகலும் எதிர்பார்ப்பு இல்லாமல் கால்நடை இனங்களுக்கும், பறவை இனங்களும்,நாய் இனங்களும், பிர உயிரினங்களும் முந்நூற்று அறுபத்து இரண்டு நாட்கள் மண்ணில் உழைக்கின்றன இல்லையா?
நமக்கு ஒரு துயரமும் துன்பமும் வராமல் ஆண்டு முழுவதும் நம் முன்னோர்களும், தேவதைகளும், நான்கு திணைகளின் தெய்வங்களும் காக்கின்றன இல்லையா?
நாம் பயிரிடும் எல்லாம் நன்றாக வளர, தழைக்க, பூப்பிடிக்க, காய் கனி மணி பிடிக்க நமக்காகப் பஞ்ச பூதங்களும் ஆண்டு முழுவதும் அரும்பாடு படுகின்றன இல்லையா?
நமது தோட்டத்தில் நமக்காக ஆண்டு முழுவதும் தேவைப் பட்ட எந்நேரத்திலும் மழை, வெய்யில், காற்று என எதற்கும் அயராது பண்ணை ஆட்கள் கடும்பாடு படுகிறார்கள் இல்லையா?
இந்த உதவி,
"காலத்தினாற் செய்த உதவி, சிறிதெனினும்:
ஞாலத்தின் மாணப் பெரிது" அல்லவா?
அப்படி இருக்க நம் வீட்டில் நம் உறவில் ஒரு துயர நிகழ்வாக ஒரு மரணம் நிகழ்ந்து விட்ட மன வருத்தம் எல்லையற்றதாக இகுக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக நாம் செய்நன்றியை மறக்கலாமா? அதற்குக் கைம்மாறாக நாம் கொண்டாடும் ஒரு விழாவைக் கைவிடலாமா?
பொங்கலன்று செயயாமல், ஊரே கூடிக் கொண்டாடும் ஒரு சமுதாய நன்றித் திருவிழாவினை இந்த ஆண்டு விட்டுவிட்டால் அடுத்த ஆண்டு வரை அதற்கு வாய்ப்பே இல்லை அல்லவா?
நமக்காக உழைத்த அத்தனை உயிர்களும் மக்களும் ஒரு ஏமாற்றத்தை அடையும் இல்லையா?
ஆகவே, எந்தக் காலத்திலும் பொங்கல் வைத்து நன்றி தெரிவிப்பதை நிறுத்தாதீர்கள்.
மரண நிகழ்வு இருப்பின் ஓரிரண்டு நாட்கள் தள்ளி மறவாம்ல் பொங்கல் வைத்து நன்றி செலுத்த வேண்டும்.
"ஆதவற்குப் பச்சரிசிப் பொங்கல் ஒன்று;
ஆன்றோர்க்குப் பச்சரிசிப் பொங்கள் ஒன்று;
ஆவினத்தின் பச்சரிசிப் பொங்கள் ஒன்று;
அழகுதமிழ்க் கன்னியர்க்குப் பொங்கல் ஒன்று;
காவலர்க்குச் சங்கராந்திப் பொங்கள் ஒன்று;
கால்மாறா மழைக்காகப் பொங்கள் ஒன்று;
மூவாமண் மகளுக்குப் பொங்கல் ஒன்று;
முன்னோர்தம் வழிவைப்போம் பொங்கள் ஏழு!!"
(இந்த ஏழு பொங்கள்களுடன் நமக்கான உயிர்க்காற்றைத் தரும் மரங்களுக்காக ஒரு பொங்கள் தனியாக வைப்போம்!!)
இனிமேல்தான் மரங்களுக்குப் பட்டிதன்னில்;
எட்டாவதாக ஒரு பொங்கள் வைப்போம்!!
சித்திரைச் சந்திரன் - சந்திர மௌலீஸ்வரன் மகி
06 ஜனவரி 2020, திங்கட் கிழமை..