பாதத்தில் ரோஜா சிவக்க வருகிறாள்

அழகிய பூவிழிகள் அங்குமிங்கும் ஆட
பழகுதமிழ் தேனிதழ் மெல்லச் சிரித்திட
பாதத்தில் ரோஜா சிவக்க வருகிறாள்
போதல்ஏன் பொன்மாலை யே !


அழகிய பூவிழிகள் அங்குமிங்கும் ஆட
பழகுதமிழ் தேனிதழில் பாட -- விழியழகி
பாதத்தில் ரோஜா சிவக்க வருகிறாள்
போதல்ஏன் பொன்மாலை யே !

-----முறையே இரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-20, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே