காட்டுத் தீயே

உயிர் தந்த காடே - இன்று
உயிர் பறித்த காடே
மழை தந்த காடே - இன்று
மழை தாராது - தீயினை அழிக்க
மறந்த காடே - வாழ
மடி - தந்த காடே - இன்று
மரண பிடிதந்த காடே -
உணவை தேடி ஓடவில்லை
உறைவிடம் காண ஓடவில்லை
உறவான - உயிரான - சந்ததிகளை
மடியில் சுமந்து ஓடிவந்தோம்
நாங்கள் வாழ்வதற்கல்ல -
எங்கள் சந்ததிகள் வாழ -ஓடி
வந்தோம் - தீக்காயங்களுடன் ஓடி
வந்தோம்.. வந்த தருணத்திலேயே
தீயிலே வெந்தோம்.....மரணித்தோம்...
எங்களுக்கு தெரியாது...
எத்தனை எண்ணிக்கை யென்று...
மனிதர்களே - உங்கள்
கண்களின் கண்ணீர்துளிகள்
காட்டாற்று வெள்ளமாகட்டும் - உங்கள்
மனங்களின் வேண்டுதல்கள் - பெரு
மழையாக மாறி - தீயை
அனைக்கட்டும் - விலங்கினம் தானே
தாவரயினம்தானே என்று- எங்களையும்
இனம் பிரிக்காதீர்கள் - உலகத்தோரே
இணைந்தே செயல்படுவீர்....
மீதமிருக்கும் உயிர்களை காத்திட....!!!

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (10-Jan-20, 10:04 pm)
Tanglish : kaattuth theeye
பார்வை : 116

மேலே