அவள் புன்னகை
பூசைக்கு மலர்க்கொய்ய
நித்தம் நித்தம்
பூந்தோட்டம் செல்லும்
உனக்காக உந்தன்
மலர்ப்புன்னகைக்காக காத்திருக்கும்
மாமலர்களெல்லாம் உன் புன்னகை
கண்டபின்னே அல்லவா
முழுவதுமாய் மலர்கின்றன
மணமும் பரப்பி
பூசைக்கு வந்த பூமலரே
மலர்களை மலரவைக்கும் மாமதியோ நீ