என்னவள் பேரழகி
என்னவள் பேரழகி
என்னவள் பேரழகி என்பரது வாடிக்கை
அன்னவளை நோக்கத் தெரியும் - - என்னவென்று
செல்லரித்த கண்நல்லப் புள்ளிமான் கண்ணென்பான்
கோல விழியென்பான் பார்
தெருவில் அவளைநோக்க வீசியது தென்றல்
அருகே விரிந்தமலர் வாசம் - ,- உரசலென்பான
ரோசாமென் மையவள்பொன் னின்நிறமாம் பேசுவன்
ரோசா நிறவதர மும்
வஞ்சியிடை யாளருகில் கொஞ்சிவந்தா தாளென்பான்
வஞ்சிக்கொடி பார்த்திருப்பா னாபொய்தான் - - பிஞ்சகன்
அஞ்சா உடுக்கை இடைக்குநான் தஞ்சமென்பான்
கொஞ்சும்கோ டாங்கியார்கண் டார்
பாம்புச் சடைபின்னல் பாருமென்பான் நம்பாதீர்
நாம்புக்குட் டைச்சடையை வர்ணிப்பான் - - பாம்புசடைப்
பின்னல் பறந்தது காற்றிலென்பான் எண்ணிடாப்பொய்
உன்காதலி யுண்மையைச்சொல் லும்