பேரழகன்

பேரழகன்

வெண்ணெய்க்கு அழகு
நவநீதனின் திருவாய்

புல்லாங்குழலுக்கு அழகு
புருஷோத்தமனின் வேணுகானம்

கோவர்த்தன மலைக்கு அழகு
கிரிதரனின் கைப்பிடி வலிமை

கருமைக்கு அழகு
ஷியாமளனின் சுந்தரம்

மயிற்பீலிக்கு அழகு
முரளிதரனின் தலை கேசம்

பிருந்தாவனத்துக்கு அழகு
நந்தகோபனின் ராசலீலை

என் ஜீவனுக்கு அழகு
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை.

-------------------------------------------------.----(Poem By Kalpana)

எழுதியவர் : கல்பனா (17-Jan-20, 9:38 am)
சேர்த்தது : Kalpana
பார்வை : 258

மேலே