என் கண்களின் அருகில் விண்மீன்கள் 555

என் அழகே...


உன் நெற்றியைப்போல ஐந்தாம்பிறை
விண்ணில் ஜொலிக்க...


நட்சத்திர கூட்டமெல்லாம்
கண்சிமிட்ட...


குளிர்காற்று நம்மை
மெல்ல தழுவி செல்ல...


என் இடது கைகோர்த்து
என் தோளில் மெல்ல சாய்ந்து...


நீ சொல்கிறாய் நிலா
எவ்வளவு அழகென்று...அந்த நிலவே என் கரம் கோர்த்து
என் தோளில் சாய்ந்திருக்க...


நீயே அழகென்று உன்
பிறைநெற்றியில் முத்தம் பதித்தேனடி...


என் கண்கள் தொடும்
தூரத்தில் இரு விண்மீன்கள்...


உன் முகத்தில்...


ஆண்டுகள் சில கடந்தும்
இன்று நினைத்தாலும்...


மனதுக்குள் மெல்லிய ஈரக்காற்று
இதமாக தழுவி செல்லுதடி...


அந்த சுகமான
நினைவுகள் நம் வாழ்வில்.....எழுதியவர் : முதல் பூ பெ.மணி (27-Jan-20, 5:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 189

மேலே