அன்பு தாயே🙏🏽
அன்பு தாயே🙏🏽
ஆயுள் முழுவதும் நான் ஆடை களையும் அவதாரம் எடுக்கவா என்னை பெற்றாய்.
கால் வயிற்றை கழுவ
கல்லுடைக்க என்னை அனுப்பியிருக்கலாமே.
அப்படி இல்லையேல்
நல்லதங்காள் போல்
கிணற்றில் தள்ளியிருக்கலாமே.
அல்லது உன் தாய்பாலுக்கு பதில்
கள்ளிபால் கொடுத்து
என்னை கொன்று இருக்கலாமே
திருட்டு சுகம் காண
நினைக்கும் ஆண்களுக்கு
இருட்டு அறையில் என்னை பூட்டி
காம வெறியர்களுக்கு என்னை இறையாக்கி என் வாழ்க்கையை அழித்துவிட்டாயே.
நிறைய நாள் நான்
யோசித்தது உண்டு.
நான் இந்த சமுதாயதுக்கு என்ன செய்தேன் என்று.
ஒரே திருப்தி
பெண்ணாக பிறந்ததற்கு.
மிக பெரிய அதிருப்தி.
அந்த அற்புத பிறவியை
கோழையாக வாழ்ந்து வீனடித்துவிட்டேனே என்று.
சிறைப்பறவையாய் இருந்து நான்
ஏன் கதவை உடைத்து சிறகடித்து வானில் பறக்க முயற்சிவில்லை.
இப்போது யோசித்துப் என்ன பயன்.
ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.
இனி பிடிக்காத வாழ்கையை வாழ்ந்து என்ன பயன்.
இனிமேல் என் வாழ்வில் வெளிச்சம் வந்து என் பயன்.
கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்
எனக்கு எதற்கு.
என் வாழ்க்கையின் முடிவுரையை நானே எழுதிவிட்டேன்.
தாயே!
எனக்கு நன்றாக தெரியும்,
விலை பொருள் வீனாகிவிட்டதே
என்று நீ கவலைபடுவாய்.
தவிர, என் மரணத்தை
எண்ணி கலங்கமாட்டாய்.
என் உடலை விட்டு உயிர் பிரியப்போகிறது
என்று மருத்துவர் கூறுகிறார்.
சிரிப்பு தான் வருகிறது.
மருத்துவருக்கு இதோ
என் பதில்.
நான் என்றோ, எப்போதோ இறந்து புதைக்க பட்டேன்.
வேண்டுமென்றால் என் உடலை இன்னொரு முறை புதையுங்கள்.
தாயே!
உன் மீது எனக்கு வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை.
நீயும் என் போலவே அக்காலத்தில் சூழ்நிலை கைதியாக ஆகிவிட்டாய்.
அதன் நீட்சியே நான்.
போய் வருகிறேன் தாயே.
இந்த போலியான வாழ்க்கையை விட்டு...
- பாலு.