கலை வாணி துதி
வெண்பாக்கள் யாத்து யாது பயன்
வெண்பாக்கள் வெறும் சொற்கள் கோர்வை என்றிருப்பின் சாரில்லா கரும்பு போல
வெண்பாக்கள் அமைய வேண்டும் படிப்போருக்கு
படித்தாலே இசைத்தரும் தேவாரபாக்கள் போல
அழகு தமிழ் திவ்விய பிரபந்தங்கள் போல
கம்பனின் ராமாயண விருத்தங்கள் போல
புகழேந்தி பாடிய நளவெண்பா போல
வெண் தாமரை வாணியே நான்முகன் தேவியே
கலை வாணியே கல்யாணியே உன்தாள்
சரணம் அம்மா என்றும் பிறர் மனம் நோகா
இனிய பாக்கள் எழுதிட எனக்கு என்நாவில்
எழுந்தருளி எழுதிட வரும் தருவாய் அம்மா
சொல்லின் செல்வனாய் என்றும்