அரசு வரித்துறை

வெள்ளை காகிதத்தை விற்று
கொள்ளை இலாபம் பார்க்கும்
நல்ல அரசாங்கம் இனி சுதந்திர இந்தியாவிலேயே

இயந்திர வண்டி வாங்கி ஓட்ட
எந்த வழியையும் செய்யாது
அரசால் வேலை கொடுக்க திராணியிம் இருக்காது

தொழிலைத் தொடங்கி நடத்த
அரசியல்வாதியால் தொல்லைப் பல வரும்
கல்லு மண்ணைக்கூட கள்ள சந்தையில் வாங்க கூறும்

நன்றாய் தொழில் செய்தால்
வருமான வரித்துறை வரிந்துக் கட்டி வரும்
கள்ளத்தொழிலோரின் காலில் காத்து நிற்கத் துணியும்

கள்ளங்கபடம் அற்றோர் கையில் விலங்கை மாட்டும்
கயவர் கூட்டம் சேர்ந்து அரசை நடத்த வைக்கும்
காரணம் எல்லாம் பணமே இதை உணர்வது நமக்கு நலமே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jan-20, 7:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 110

மேலே