காகிதக் கப்பல்

காகிதக் கப்பல் ஓன்று
மழை வெள்ளத்தில் மிதந்து சென்று
ஒரு சருகில் மோதி,
மெல்ல சருகின் மேல் தாவியது .
தாவியதும் அவள் காதலும்
ஜெயிக்கும் என்று துள்ளிக் குதித்தாள்
அந்தப் பெண்.
அவள் நினைக்காத ஓன்று
அங்கே வெள்ளத்தில்
காலால் அடித்துக் கொண்டு ஒரு சிறுவன்
ஓடி ஓடி விளையாடி வந்தான்
அந்த வெள்ளம் அலைபோல்
காகிதக் கப்பலில் மோதியது
சருகினின்று விலகிய கப்பல்
நனைந்து நனைந்து நீரில் மூழ்கியது
துள்ளிய அப்பெண்ணின்
கால்கள்தடுமாறியது, மனமோ துவண்டது
காதல் காகிதத்தில் அல்ல
காவியத்தில் கட்டுக்கோப்பாய்
நிலைத்து நிற்கும் நேசம்

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Feb-20, 10:55 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaakithak kappal
பார்வை : 93

மேலே