மௌனம்
மௌனம்
குயில்கள் இசைக்கும் இனிய ஒலி!
கோயில் மணியின் கணீர் ஒலி!
காற்றில் தவழும் மெல்லிசையின் ஒலி!
பக்தி கமழும் நற்பாக்கள் ஒலி!
குழந்தை கழறும் மழலை ஒலி!
வீழ்ந்து மீளும் அலையின் ஒலி!
ஒலிகளால் நிறையும்
அலையும் மனதிலும் அமைதி!
உன் மௌனங்களாலோ
எனக்குள்
அமைதி குலைக்கும் சலனம்!