மீண்டும் எழுவேன்

எனக்குள் எழும் கேள்விகளுக்கு
விடைகாண முடியாத போது
உன்னையே சீண்டுகிறேன்
நீயோ, ஓரிரு வார்த்தைகளில்
என்னை முடக்கிவிடுகிறாய்
மூடிவிட்டேனென்று நினைத்தாயா?
இல்லை; முட்டி மோதி
மீண்டும் வினா எழுப்புவேன்
எனக்குள் நானே
யாரோ ஒரு நாள்
விடை தேடுவார்கள்
என் கேள்விகளுக்கு;
பதிலாய் நான் மட்டுமே!

எழுதியவர் : யோகராணி கணேசன் (1-Feb-20, 11:33 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : meendum ezhuven
பார்வை : 1060

மேலே