கனா நீயே
![](https://eluthu.com/images/loading.gif)
கரைந்திடும் நிலவில் கரை நீயடி ! அலைந்திடும் நீரில் நுரை நீயடி !
உறசிடும் காற்றில் ஈரம் நீயடி ! எரிந்திடும் தனலின் அனல் நீயடி !
கலங்கிடும் கனவில் நிழல் நீயடி! நடந்திடும் நினைவில் வலி நீயடி!
தென்றல் தந்த இதம் நீயடி ! இருளில் தழுவும் வதம் நீயடி!
இனிமையில் கசக்கும் மாறுதல் நீயடி ! தெளிவில் மயக்கும் ஆறுதல் நீயடி!
எதிர்மறை பேதம் நீயடி! ஆயுள் வரை குரோதம் நீயடி!
மடிசாயும் சேயும் நீயடி ! மடியேந்தும் தாயும் நீயடி!
நான் சிதற விட்ட சொற்கள் நீயடி! நன் ஒழித்து வைத்த ஆசை நீயடி!
என்றும் எதிலும் என் உயிரை உலுக்கும் கனா நீயடி!