தேவதை வந்தாள்

உதயத்தில் வந்தாள்
நீண்ட நாட்களின் பின்
என்னிதய தேவதை
புது வெள்ளத்தில்
குதித்தாடும்
மீனானது
எனதுள்ளம்
பனித்துளியின்
சிலிர்த்தெழும்
ரோஜாப்பூவாய் மாறிய
அவள் வசீகர
முகம் கண்டதும்
காலைத் தென்றலின்
குளிர்வில்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (3-Feb-20, 11:47 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 520

மேலே