உருமாறிய உயிர் மூச்சு

ஊதாங்குழலில்
உள் நுழைந்த
என் மூச்சு
கரிகட்டையாய்
அஸ்தமாகும் கனலையே
இரத்தப் பொறியாக
காற்றிலே தெறிக்கவிட்டது...

கருங்காயாய்
மண் பானையில்
பதுங்கிய வாழைப்பழமாய்
புகை மூட்டத்தின்
அகச்சூழலில்
புடம் போட்ட தங்கமாய்
என் உயிர் மூச்சின்
முத்தங்கள்..... கருப்பையில்
காணலாக கொழுந்திட்டு
கருவாக உருப்பெற்று
மழலையாய் வெளி வரும்போது
ஊதுகுலழாய் யிருந்தவள்
புல்லாங் குலழாய் உருமாறி உதட்டில்
முத்தமிடும் போது
உயிர் மூச்சின்
உச்சத்திலே ஊஞ்சலாடினோம்
மூச்சிலே யென் மூச்சிலே
உன்னை சுமக்கிறேன்
யென்ற பாடல் வரியோடு
வாரி அனைத்தோம்
எங்கள் மழலையை
வாஞ்சையோ.டு

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (3-Feb-20, 11:31 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 153

மேலே