இன்று என்ன நாள்
இன்று என்ன நாள்
பெத்த தாய்க்கு உணவில்லை உடையில்லை
செத்த அப்பனுக்கு திதியும் யில்லை
வெட்கக் கேடு மிகுந்தவெட் கக்கேடு
வெட்கக் கேடு தமிழர் நிலையிப்போ
வெட்கக் கேடுசொல் லமுடியா கேடு
பிறந்தநாள் யார்க்கும் கொண்டாடும் தீயர்
அவரின் இ!றந்தநாள் கொண்டாட லுமேனாம்
பிறந்தநாள் இறந்தநாள ஆட்சிநாள் சிறைநாள்
பிடித்த பீடைபல நடத்தும் நாளாம்
கொடிநாள் இடிநாள் போராட்டத் தடியடிநாள்
தீக்குளித்த தியாகிநாள் இதற்கோ வருடநாள்
தீயோனே ஆண்டவனின் திருநாளை யொதுக்காய்
துக்கநாள் கொண்டாட்ட நாளேனாம்
திட்டமிட்டு தமிழரை தீயோர் அழிப்பதேனோ