காதலின் நிலையும் காதலர் நடையும்

இதழால் நகைத்து இதயம் பறிக்க
இனிக்கப் பழகி யிழுப்பாரே
நுதல்மேல் திலகம் நொடிக்கு ளிடவே
நுணுக்கக் கலைகள் புரிவாரே
உதட்டா லுரைக்கு முளுத்தக் கதையால்
உலகை மறக்க விடுவாரே
முதல்நா லிரவை முடித்தக் கணமே
முருங்கை மரத்தி லிருப்பாரே!

காதலின் கடலில் கரையைத் தேடும்
கப்பல் போன்று மிதப்பாரே
சாதலின் நிலையைச் சாகசங் காட்டிச்
சாதனை நிகழ்த்திச் செயிப்பாரே
போதனை செய்வதில் புத்தனை மிஞ்சிப்
போகிற வர்களா யிருப்பாரே
வேதனை என்பதன் வேரினை யூன்றிப்பின்
வேகமாய் நடைதனைக் கட்டுவாரே!
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Feb-20, 2:05 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே