முட்டாள் எருமை

தனிமைதான் சிந்தனையை தூண்டுகிறது;
சிலருக்கு அறிவு சார்ந்தும் பலருக்கு நினைவு சார்ந்தும்

சீராக்கப்பட்ட சிந்தனை; அறிவு சார்
தூண்டியிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது

தனி மனித சிந்தனைக்கு கூட்டு முயற்சி தேவையில்லை
அவற்றை செயலாக்குவதிலேயே கூட்டுறவு அவசியம்!

குழுக்களாக வாழும் பாலூட்டி இனமே புத்திசாலிகளாம்;
தனிமையாக வாழும் பாலூட்டிகளைவிடவும்

வெள்ளெலிதான் அதி முட்டாள் பாலூட்டி இனமாம்
ஏனெனில் அதன் மூளை சிறிதாக இருப்பதே
காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

அப்போ ஏன் நாம் பருத்த தலைகொண்ட
எருமை மாட்டை முட்டாளாக்கினோம்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (6-Feb-20, 12:06 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : muttal erumai
பார்வை : 813

மேலே