ஓ இளைஞனே💥

ஓ! இளைஞனே !!💥

ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம் நில்.
எங்கு செல்கிறாய்.
நீ போகும் போது நான் கேட்பது அபசகுனமாக தெரியும்.
ஆனால் நீ இப்போது போகும் இடம் உன் வாழ்நாள் முழுவதும் உன்னை அபசகுனமாக ஆக்கிவிடும்.
நீ எங்கு செல்கிறாய் என்பது எனக்கு தெரியும்.
உன் தலைவன், ஆதர்ஷ புருஷன் நடித்த படத்தின் முதல் நாள், முதல் பட காட்சி பார்க்க தானே செல்கிறாய்.
அந்த பட கதாநாயகன் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய போகிறாய்.
இப்போது நான் உன்னை தடுத்தால் என்னை நீ கொலை கூட செய்துவிடுவாய்.
காரணம் உன் கண்மூடிதனமான ரசனை அப்படி உன்னை செய்ய தூண்டும்.
உன் அறியாமையை கண்டு சிரிப்பதா. அல்லது அழுவதா.
நீ இப்படி ஆர்பரித்து அந்த நாயகனின் படம் பார்பதால் உனக்கு என்ன லாபம்.
அந்த படம் பார்ப்பதால் ஏதாவது வாழ்க்கைக்கு உகந்த படிப்பனை உண்டா.
ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை வன்முறை, வன்மம், வக்ரம், கொலை, ரத்தம்...... இது தவிர வேறு ஏதாவது அந்த படத்தில் உள்ளதா.
காதல் என்ற பெயரில் கலாச்சார சீர் கேடு.
கதாநாயகி கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசம்.
அறிவுரை என்ற பெயரில் வன்முறை தூண்டபடுகிறது.
கதாநாயகன் என்ற பெயரில் ஒரு காட்டுமிராண்டிதனம் கட்டவிழ்கப்படுகிறது.
பாட்டு என்ற பெயரில் ஒரே இறைச்சல்.
நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவு செய்தல்.
இப்படி நீ பார்க்க போகும் படம் துர்நாற்றம் வீசும் குப்பைகளின் குவியல்.
அந்த நாற்றத்தை நீ சுவாசித்தால் வியாதி தான் வரும்.
காசு கொடுத்து நோயை வாங்க நீ என்ன பைத்தியகாரனா.

இளைஞனே!
உண்மையான கலை செத்து பல வருடங்கள் ஆகி விட்டது.
கலை, விலை போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.
நல்ல இசை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.
கலை எப்போது கார்ப்பரேட் கைக்கு சென்றதோ, அப்போதே அது மூலதனம் என்ற பேயிடம் சிக்கி
சீரழித்து விட்டது.
உண்மை சொல்லட்டுமா
உண்மையான கலைஞர்கள் உன் கிராமத்தில் உள்ள கூத்து கலைஞர்கள், நாடக கலைஞர்கள் தான்.
உன் படிப்பு முடியட்டும்.
நீ வெற்றி பெற்ற நிலையில்,
அத்த பரம்பரையில் யாராவது உயிருடன் மிச்சம் மீதி இருந்தால்
அவர்களுக்கு நீ உதவி செய்.
அதுவே நீ கலைக்கு செய்யும் உண்மையான சேவை.

இளைஞனே நீ சென்னை வந்த நோக்கம் படிக்க தானே.
அங்கே கிராமத்தில் தினம் கை வலிக்க, கல்லுடைக்கும் உன் தாய், தந்தை உன்னை பற்றி பல கனவுகள் காண்கின்றனர்.
அந்த கனவை நீ கானல் நீர் ஆக்கிவிடாதே.
நான் கேட்கிறேன்
நீ ஆசையுடன் போற்றப்படும் கதாநாயகனின் படம் ஓடுகிறதோ, ஓடவில்லையோ, அந்த நபர் கோடி,கோடியாக சம்பாதித்து அவன் கல்லா கட்டிவிடுவான்.
உன் நிலைமை அப்படியா.
அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பைசா, பைசாவாக எண்ணி செலவழிக்கும் நீ,
கடன் வாங்கி கொண்டு அப்படி அந்த படத்தை பார்க்க வேண்டுமா?
இந்த விஷயத்தில் இவ்வளவு அக்கறை காட்டும் நீ!
உன் படிப்பில் காட்டுவாயா.
இப்போது நீ படிக்கும் பாடத்தில் இருந்து நான் ஒரு கேள்வி கேட்டால் உன்னால் உடனே பதில் சொல்ல முடியுமா?
கலை, இலக்கியம், கதை, கவிதை எல்லாம் தேவை தான்.
இவை இல்லாமல் மானுடம் இல்லை.
இவை யாவும் மனிதன் நாகரீகத்தை பறைசாற்றும்.
ஒப்பு கொள்கிறேன்.
ஆனால் உன் தனிப்பட்ட நிலையை கொஞ்சம் யோசித்துப்பார்.
உன் பெற்றோர்கள் உன் படிப்புக்கு அனுப்புவது பணம் அல்ல, அவர்களுடைய ரத்தம்.
நீ படிக்கும் பொறியியல் படிப்பு,
அவர்கள் இருவரின் ரத்தத்தை அட்டையாக உருஞ்சிகிறது.
உனக்கு ஒரு நல்லதொரு எதிர் உருவாக தினம், தினம் செத்து பிழைக்கும் உன் அம்மா, அப்பா.
உன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள உன் பெற்றோர்களுக்கு நீ சாதித்து காட்ட வேண்டாமா.
நீ செலவழிக்கும் ஒவ்வொரு நோடியும் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறது.
இந்த நொடியில் ஒரு சபதம் செய்.
இந்த நொடியில் உனக்குள் ஒரு குறிக்கோளை உருவாக்கு.
இந்த ஒரு நொடியில் இருந்து நீ புதிதாய் பிறந்ததாக நினைத்து விடு.
போதை தரும் மாயைகளை மறந்து விடு.
கல்வியை கண் போல் நினைத்து விடு.
காரியத்தில் கண் வைத்து விடு.
களம் இறங்கி விடு.
கடுமையாக உழைத்து விடு.
குறிக்கோளை எட்டி விடு.
வாழ்கையை வென்று விடு.

- பாலு.

எழுதியவர் : பாலு (10-Feb-20, 8:02 pm)
சேர்த்தது : balu
பார்வை : 157

மேலே