மாண்புமிகு மனிதர்கள்

போகட்டும்...போகட்டும்..
இவர்களது விளிம்பு எதுவரை
என்று நாம் பார்ப்போம்..-
பிறருக்கு அநீதி இழைக்கும்..
இந்த மாண்புமிகு மனிதர்கள்..
போகட்டும்...போகட்டும்..
இவர்களது விளிம்பு எதுவரை
என்று நாம் பார்ப்போம்..

வலியோடு தான் வாழ்க்கை..
உன் வலியை விற்று உயரச் செல்..
தீப்பட்டும் தேனை இழந்தும்
முடங்கிடாது தேனீக் கூட்டம்..
பலனில்லாத கடமை இல்லை..
பலனை எதிர்ப்பார்தே
கடமையை செய்..
முன்னேறு..முன்னேறு..நீ யாரையும்
மிதிக்காமல் முன்னேறு..
ஆண்டுகள் கடந்தால்
பாறையும் உப்பாகும்..
ஆண்டுகள் கடந்தால்
அனுபவமே முத்தாகும்..

போகட்டும்...போகட்டும்..
இவர்களது விளிம்பு எதுவரை
என்று நாம் பார்ப்போம்..-

உறங்காமல் புதையலைத் தேடி
புத்தரைப் போலவே பேசுவார்..
நல்லொழுக்க அறிவுறைக் கூறி
பாதைகள் பலவும் மாறுவார்..
குரங்கு உள்ளம் கொண்டு -தன்னை
மனிதன் என கூறுவார்..
முடிந்து போகும்
நிலை வரும் போது
கருவறையை தேடுவார்..
மீண்டும் பிறக்க - அவர்
கருவறையை தேடுவார்..

போகட்டும்...போகட்டும்..
எதுக்கும் பயனற்ற-அந்த
விளிம்பினைத் தேடி
இந்த மாண்புமிகு மனிதர்கள்..
போகட்டும்..போகட்டும்..

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (10-Feb-20, 5:39 pm)
பார்வை : 122

மேலே