🕸️🕸️🕸️ சமூக வலைக்கைதி 🕸️🕸️🕸️

உள்ளங்கையில் உலகம் அடங்கியது
என்னவொரு ‌கொக்காரிப்பு…!
அடுத்த வீட்டின் நபரின் முழுப்பெயர் - கூட
முழுமையாக அறியாத அவலம்.

எதை எடுத்து, எதை விடுத்து
சாப்பிட வேண்டும் என்ற
அறியா ஞானம் கொண்ட குரங்கின்
கையில் கிடைத்த பலாக்காய் - போன்று
ஆனது நம் கையில் சிக்கிய சமூக வலைத்தளம்

பாதுகாப்பாய் வீட்டை பூட்டி
அதன் சாவியை வாசலில் வைத்தேன்
என்ற கதையாய் ஆனது - நமது
சமூக வலைத்தள பரிவர்த்தனைகள்.

இங்கு போராளிகள் அதிகம்,
நான்கு பதிவு.. இருபது பகிர்வு - என்ற.
விகிதத்தில் போராடி கொண்டே இருப்பார்கள்
காரண காரியம் அப்படியே இருக்கும்.

முன்னெற்றத்தின் அங்கமாக - சில பதிவுகளால்
வலைத்தளம் முன்னெடுத்து இரு‌அடி செயல்பட்டால்…
நான்கு அடி சரிந்து சமூகம் பின்னோக்கி விழுகிறது.
அடுத்த பதிவு மற்றும் பகிர்வில்.

செய்திகள் விரைந்து பறந்தது,
வதந்திகள் காற்றாய் எங்கும் நிறைந்தது.
சமூக வலைத்தளம் கெடு கெட்டது அன்று
தவறான முறையில் ‌வழி நடத்துகிறோம்.
என்பதை ஆதங்கம்.

நினைத்ததை தேடியது கடந்து,
கண்டதை பின்தொடரும் - சமூக
வலையில் சிக்கிய புறா போன்று கைதியாய்
நாம் இருப்பதை ஓத்துக் கொள்வோம்.

நல்லதை, நான்கு இதோ என சுட்டி காண்பிக்றோம்.
இங்கு பதிவேற்றம் காணும்‌ அனைத்தும்
நல்லது தான் என்று மார்தட்டி சொல்ல
எவரும் இலர்.

ஃதங்கம் ⛈️

எழுதியவர் : தங்கமாரியப்பன் (19-Feb-20, 11:44 am)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 238

மேலே