சிறுவனின் ஆசை

தொட்டுவிட துடிக்கும் மனசு
கண்பட்டுவிட, பட்டுவிட
மிளிரும் மென்மையின் மேனி
கட்டுக் குலையாத உடல் வாகு
கிட்ட கிட்ட வரும்போது
எட்ட எட்ட போகிறியே
அலங்காரம் குறைந்துவிடும்
நினைப்பில் பட்டு பட்டென்று
வண்ண சிறகை விரிக்கின்றாயே
எத்தனை எத்தனை வர்ணங்கள்
உன் தளிர் மேனியிலே
இத்தனையும் இறைவன் தந்திட்ட கொடையோ
நித்தமும் நீ வரவேண்டும்
உன்னை நான் தொட வேண்டும்
உன் அழகை அள்ளி அள்ளி
பார்க்க எனக்கு மிக்க ஆசை
உனக்காக பூந்தோட்டத்தில் நான்.....

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Feb-20, 10:30 pm)
Tanglish : siruvanin aasai
பார்வை : 493

மேலே