அவன்

கடவுள் உன் முன்னே வந்து
'என்ன வரம் வேண்டும் கேள்
தருகிறேன் என்றால் என்ன கேட்பாய்'
' என்றுமே மாறா இளமைக்கோலத்திலேயே
நான் இருந்திடல் வேண்டும்' என்று கேட்பேன் என்றான்
பிறகு கொஞ்சம் யோசித்தான் , அவன் முன் அவன்
பிள்ளையின் பிள்ளை... தாத்தா என்று செல்லமாய்
அழைத்தது..... ஐயோ நாளை இவன் வளர்ந்து
என் முன் நிற்க நான் அவன்போல் இளமையாய்
இருந்தால் அவன் என்னை என்னென்று அழைப்பான்..
அவன் தலை சுத்தியது....
இந்த பேரன் தரும் இன்பத்தைவிடவா என் இளமை
எனக்களிக்கும்.... இல்லை இல்லை
கடவுளே நான் வேண்டுவது ஒன்றும் இல்லை என்றான்
கடவுள் சிரித்தார்..... மறைந்தார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Feb-20, 8:40 pm)
Tanglish : avan
பார்வை : 89

மேலே