என் ஜீவனுக்கு ஓய்வு கொடு

ஆபுத்திர அட்சயப் பாத்திரத்தை ஏந்தினேன்
அதில் பௌத்திரக் காதலை தாரைவார்த்துச்
சென்ற ஆதிரையின் ஆண்பால் நீ....

வற்றாதக்்காதல் நிரம்பி வழிகிறது .....
எந்தக் காயசண்டியர் பசிக்கும் விருந்தாக மனமில்லை....

பொங்கிடும் உணர்வுகளுக்கு அதுவே
தீயை மூட்டி தீனியும் வைக்கிறது....
தங்கிய காயங்களுக்கும் அதுவே மருந்தாகி மறதியை மறக்கடிக்கிறது......

உன் நினைகளில் குடியேறியே வாழ்ந்து போகிறேன்.....
ஜீவன் பிரியும் ஒரு நொடிக்கு முன்பேனும் வந்திடு....
கனக்கும் உன் இதயத்தை சுமந்த என் ஜீவனுக்கு ஓய்வு கொடு!

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 9:52 pm)
பார்வை : 73

மேலே