உன் உயிராய் நானிருக்க♥️

உண் உயிராய் நானிருக்க♥️

ஏக்கம் நிறைந்த பார்வையுடன்
தாகம் நிறைந்த மனதுடன்
கற்பனைக்கு எட்டா
எண்ணங்களுடன்
உன் வரவை எதிர் நோக்குகிறேன்

காலம் நம்மை வெகு நாட்கள் பிரித்து விட்டது
இனியும் உன்னை காணாமல் என்னால் இருக்க முடியாது
நாளை விடியல்
சூரியன் போல் என் எதிரே நீ வர வேண்டும்
என் ஆசை தீபங்கள்
அனைத்தும் நீ ஏற்ற வேண்டும்
காதலின் கோயிலில்
காம இறைவனுக்கு நாம் இருவரும் இணைந்து பூஜை செய்ய வேண்டும்
காதல் கனிரசம் பிழிந்து
தாகம் தீர பருக வேண்டும்
மன்மதன் ரதி போல்
காற்றுக்கு கூட இடம் தராமல் பிண்ணி பினைந்து
சிந்தாமல் சிதறாமல்
காதல் முத்தை எடுக்க வேண்டும்
அத்துனை காம லீலைகள் பயின்று
இளமை ஆற்றில் நீந்தி
சிற்றின்பத்தை சிறிப்பு செய்ய வேண்டும்
மண்ணவனே வா
வண்ண மயில் உனக்காக காத்திருக்கும்
சின்ன இடை உனக்காக காத்திருக்கும்
நீ வர்ணித்த மான் விழிகள்
உன்னை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும்
நீ கொடுத்த அந்த கடைசி முத்த இதழ்கள் உனக்காக காத்திருக்கும்
நீயாகவே மாறிய என் உயிர் உனக்காக காத்திருக்கும் .
-பாலு.

எழுதியவர் : பாலு (29-Feb-20, 10:47 am)
சேர்த்தது : balu
பார்வை : 270

மேலே